Ostan Stars
Agazhnthiduvar thammai
அகழ்ந்திடுவார் தம்மை
என்றும் அன்புடன்
நிலம் தாங்கும்
என்னதான் குறைகள்
செய்தாலும்
உன் இதயம் தாங்கும்
என்றும் எனைத் தாங்கும்

அகழ்ந்திடுவார் தம்மை
என்றும் அன்புடன்
நிலம் தாங்கும்

Music

1. அழுதாலும் உன் கரம் தேற்றும் மகிழ்ந்தாலும் அது உன் நிழலில்
அழுதாலும் உன் கரம் தேற்றும்
மகிழ்ந்தாலும் அது உன் நிழலில்

உன்னை நான்
மறந்து வாழ்ந்தாலும்
வாழ்வதும் உன்னாலே
வல்லவன் நீயின்றி
என் இதயத்தில் நிறைவில்லை
உந்தன் தாளில் கூடும்
பலகோடி பூவிதழுள்
நானும் ஒன்றாவேன்
உன் திருநாளில்
என் உள்ளம்
மங்களம் பாடும்
தன் இல்லம்
உன் நினைவாலே
தெய்வீகம் வாழ்வு பெறும்

அகழ்ந்திடுவார் தம்மை
என்றும் அன்புடன்
நிலம் தாங்கும்

Music

2. ஆசைகளில் தடுமாறியதில்
விழுந்தால் எடுப்பதும் உன் உருவே
ஆசைகளில் தடுமாறியதில்
விழுந்தால் எடுப்பதும் உன் உருவே

துன்பம் நான் அடைந்து சோர்ந்தாலும் வாடுவதும் நீயே
என்னிடம் வலுவில்லை
உன் பலமன்றி கதியில்லை

வரும் காலம் உன் மடியில்
வாழ்வும் உன் மடியில்
நானும் உன் சந்நிதியில்
உன் திரு உள்ளம் என் இல்லம்
உன் திரு சொல்லே என் சொந்தம்
உன் உறவொன்றே
என் இன்பம் என்றென்றும்

அகழ்ந்திடுவார் தம்மை
என்றும் அன்புடன்
நிலம் தாங்கும்
என்னதான் குறைகள்
செய்தாலும்
உன் இதயம் தாங்கும்
என்றும் எனைத் தாங்கும்